எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழாவில் திருவள்ளூர் மாவட்டம் பஜார் வீதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளராக முன்னாள் எம்.பி. வேணுகோபால் கலந்துகொண்டு பேசினார். அப்போது 2013ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று தெரிவித்தது தாங்கள்தான் எனவும்; அதன் மூலமாகத்தான் திருவள்ளூரில் மருத்துவக்கல்லூரி வந்தது எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இரண்டு மாதத்தில் தான் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததாக பொய்யான பரப்புரை செய்துவருகிறார் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஸ்டாலின் அவர்கள் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் அதிமுக ஆட்சிதான் உண்மையான ஆட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாவட்ட கூட்டுறவு சங்க இயக்குநர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: கத்தி முனையில் காதலன் முன்பாக பெண் கூட்டு பாலியல் வல்லுறவு