நாடு முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவிக்கும்விதமாக ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுவருகிறது.
இந்தாண்டு கரோனா தொற்றின் காரணமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்டங்களில் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''டிஜிட்டல் கல்வி முறையில் மாணவர்கள் உள்ளனர். இதனைக் கண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அச்சம்கொள்ள வேண்டாம்.
டிஜிட்டல் முறைக்குத் தங்களை மாற்றிக்கொள்ள அனைவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இருமொழி கொள்கை'யைப் பின்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு: மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பழகன் கடிதம்!