மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் ரசிகர்கள், அதிமுகவினர், பொதுமக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒருபகுதியாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நேசன் தலைமையில், நகர மன்ற முன்னாள் தலைவர் கமாண்டோ பாஸ்கர், அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பி.எம்.சி. வங்கி ஊழல்: ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத் தலைவர்களை விடுவிக்கத் தடை
இந்நிகழ்வில், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் துக்காராம், செல்வம், செந்தில், ராமதாஸ், சீனிவாசன், ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.