திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மணவாள நகர் மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென காற்றாடி பறந்து வந்து அவரது கழுத்தில் மாஞ்சா நூல் சுற்றி கொண்டதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதையடுத்து காயமடைந்த அவர் பட்டம் விட்ட இளைஞர்களிடம் சென்று, “ஏன் தம்பி இப்படி பட்டம் விடுறீங்க” என்று கேட்க, ”நாங்கள் அப்படி தான் விடுவோம்” என்று கூறியதோடு, அவரை அடித்தும் உள்ளனர். பின்னர் மீண்டும் அவர்கள் பட்டம் விட்ட தொடங்கினர்.
இதனால் கோபமடைந்த சத்தியமூர்த்தி திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் பட்டம் விட்ட அந்த மூன்று மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடததிற்கு வந்த காவல்துறையினர் காற்றாடி விட்ட நாகராஜ், தீனதயாளன், ராஜ ரூபேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து இரண்டு காற்றாடிகள், மாஞ்சா நூல் கண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியரின் வாகனம் பறிமுதல்: காவல் நிலையத்தில் மின்சாரத்தை துண்டித்து பழிவாங்கிய ஊழியர்கள்!