திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நான் திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தேன், அதன்படி சுமார் ரூ. 325 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க இம்மாவட்டத்தில் ஓடும் நதிகளை இணைக்கவும், அந்த நதிகளில் தடுப்பணைகள் கட்டும் பெரிய திட்டம் வகுத்து அதற்காக தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். திருவள்ளூர் தொகுதியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: பின்லாந்தின் சன்னா மரின் உலகின் இளம் பிரதமர்!