திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கலைக் கல்லூரி விளையாட்டுத் திடலில் தூயமணி செலக்ட் அணி சார்பில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை, வியாசர்பாடி, புழல் புத்தகரம், மேலூர் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்ற இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் பாடியநல்லூர் அணி முதலிடம் பெற்று கோப்பையையும், ரூ.12 ஆயிரம் பரிசினையும் பெற்றது. புழல் புத்தகரம் அணி இரண்டாவதாக வெற்றிபெற்று ரூ.10 ஆயிரம் பரிசையும், கோப்பையையும் பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.