சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ பாலாஜி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்கள் வீடுகளில் சமைத்த பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கஞ்சி, கூல், தயிர் வடை, கீரை வடை, அடை, கேப்பக்களி, எள்ளுருண்டை, பயிர் வகைகள் போன்ற தானியங்களால் ஆன உணவுப் பொருட்களை சமைத்துக் கொண்டு வந்து பள்ளியில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இதனை சாப்பிடுவதால் கிருமிநாசினி, நோய் எதிர்ப்பு சக்தி, நீண்ட ஆயுள், உடல் வலிமை, நோய்நொடி இல்லாத வாழ்க்கை தங்களுக்கு கிடைக்கும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் அதனை தொடர்ந்து மாணவர்கள் பள்ளி மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டான கண்ணாமூச்சி, கல்லாங்காய், நொண்டி விளையாட்டு, பல்லாங்குழி, ஒரு குடம் தண்ணி ஊத்தி போன்ற உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து மாணவிகள் பள்ளிவாசலில் வண்ணக் கோலமிட்டு தங்கள் திறமையினை வெளிப்படுத்தினர். நாம் மறந்துபோன உணவு முறையையும் விளையாட்டுகளையும் அப்படியே மாணவ மாணவிகள் நம் கண்முன் நிறுத்தியதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் அவர்களை வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: கோவையில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா