திருவள்ளூர்: பூண்டியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று(மார்ச் 13) நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த திருவள்ளூர் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடைப்பயணமாக சென்றார்.
அப்போது, பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரனிடம் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்லும்போது, படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
'படியில் பயணம் நொடியில் மரணம்'
பூண்டியிலிருந்து புறப்பட வேண்டிய பேருந்து வந்துநின்றதால், மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். அப்போது, மாணவர்கள் பயணம் செய்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரனும் திமுக நிர்வாகிகளுடன் கையசைத்தபடி சென்றார்.
'படியில் பயணம் நொடியில் மரணம்' என்ற வாசகத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி படிக்கட்டில் பயணம் செய்யவிடாமல் தடுக்கவேண்டிய எம்எல்ஏவே கட்சி நிர்வாகிகளுடன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தது அவர் மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: '4 மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன? - பழ.நெடுமாறன் பேச்சு'