திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தனியார் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ”ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் மூன்றாவது அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேராது. தற்போது இதுகுறித்து ஏதும் பேச முடியாது. வாரிசு அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும்.
50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அதனை அறியாமல் பொத்தம் பொதுவாக கருத்து கூறக்கூடாது
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது. பெட்ரோல், டீசல், விலை குறைப்பு தொடர்பாக மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். எஸ் வங்கியில் கடன் பெற்றது சாமானிய, ஏழை எளிய, நடுத்தர மக்கள் அல்ல. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பெரும் செல்வந்தர்கள் தான்.” என அவர் கூறினார்.
இதையும் படிங்க : மூன்று தலைமுறைகள் படித்த பள்ளியை மூட வேண்டிய அவல நிலை!