திருவள்ளூர் மாவட்டம் ஆயில் மில் இந்திரா காந்தி சாலையில் வசித்து வருபவர் செந்திலின் மகன் மிதுன் (18). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் திருநின்றவூர் சென்று கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வழக்கம் போல் நேற்று காலை 8 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கு தனது செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற விரைவு ரயில் எதிர்பாராத விதாமாக அவர் மீது மோதியதில், அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர், கல்லூரி மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர். ரயில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொலைக்காட்சி நிருபரைத் தாக்கிய இருவருக்கு காவல் துறை வலைவீச்சு!