திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் சிப்காட் அருகேயுள்ள இந்தியன் பர்னிச்சர் புரோடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் அதிக நாள்கள் பணிபுரிந்து வந்த 16 நபர்களை அதன் நிர்வாகம் எந்தவித அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது, "எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அப்பாவி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். இல்லையெனில் போராட்டம் நீடிக்கும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் - நகராட்சியை கண்டித்து பாஜக போராட்டம்