திருவள்ளூரை அடுத்த சேலை ஊராட்சியைச் சேர்ந்தவர் கவியரசு (23). நேற்று இவர் தனது நண்பர்கள் மணிகண்டன், சதீஷ்குமார், மனோஜ், விக்னேஷ், சக்திவேல் ஆகியோருடன் சேலை கிராமத்தில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டியுள்ளனர்.
இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட, அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் திருவள்ளூர் தாலுகா உதவி ஆய்வாளர் தயாநிதி தலைமையில் காவல் துறையினர் அங்கு சென்று கவியரசு, அவரது நண்பர்கள் உள்பட ஆறு பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும், இதுபோன்ற பட்டாக்கத்தி கலாசாரம் தமிழ்நாட்டில் பரவி வருவதால் இளைஞர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று உதவி ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!