திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பெரிய தெருவில் ராமர் கோயில் உள்ளது. நேற்று இரவு(ஜூலை 20) அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டியிருந்த கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை, தங்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று(ஜூலை 21) காலையில் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த விநாயகர் சிலை மற்றும் இரண்டு கிராம் தங்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கோயில் அர்ச்சகர் மணி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு வெளிநாட்டு பறவைகள் கடத்தல்? - காவல்துறை விசாரணை