ETV Bharat / state

கரோனா: திருவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் மனு பெற தனி கவுன்ட்டர்!

author img

By

Published : Apr 27, 2020, 10:18 AM IST

திருவள்ளூர்: காவல் நிலையத்தில் தனி கவுன்ட்டர் அமைத்து பொதுமக்களிடம் மனுவைப் பெறும் நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் தொடங்கிவைத்தார்.

பொதுமக்களிடம் மனு பெற அமைக்கப்பட்டுள்ள தனி கவுண்டர்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மனு கொடுக்க வரும் நபர்கள் யாரும் காவல் நிலையத்திற்குள் வரக்கூடாது எனவும், வரவேற்பாளர் வெளியில் அமர்ந்து மனுக்களைப் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் மனு பெற தனி கவுன்ட்டர்

இதனையொட்டி முதல்முறையாக திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலையத்தில், 144 தடை உத்தரவு முடியும்வரை வெளியிலிருந்து மனுக்களைப் பெற, தனி கவுன்ட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கவுன்ட்டர் மூலம் மனுக்களைப் பெறும் வசதியை திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் நேற்று தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியின்போது திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த், நகர துணை ஆய்வாளர் சக்திவேல் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: முதல்ல பாஸிட்டிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.