ETV Bharat / state

சிறுமியை வைத்து பாலியல் தொழில்! பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - நீதிமன்றம்! - Latest Tiruvallur News in Tamil

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக பெண் உள்பட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

10-years-in-prison-for-two-who-engaged-in-sex-work-with-a-girl
சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 7:48 AM IST

திருவள்ளூர் : திருவொற்றியூரில் சிறிமியை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுபத்ரா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ராதேவி (வயது 46) தஸ்தககிர் (வயது 39). இவர்கள் இருவரும் பெண்களை வைத்து பாலியல் பலாத்காரம் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சித்ரா தேவி மற்றும் தஸ்தகீரிடம் 18 வயதிற்கு கீழுள்ள சிறுமியை அனுப்பி வைக்குமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து திருவொற்றியூரில் தனியாக ஒரு வீடு எடுத்து 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து விரைந்து வந்து சித்ராதேவி, தஸ்தகீர் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக திருநாவுக்கரசு உயிரிழந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கே.அமுதா ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் வழக்கு மீதான விசாரணை முடிந்து நேற்று (நவ. 3) நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், குழந்தைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் தொழில் நடத்துவதற்கு வீட்டை பயன்படுத்த குற்றத்திற்காக 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பெண்களை கடத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக மூன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் சித்ராதேவி மற்றும் தஸ்தகீர் ஆகிய இருவருக்கும் தல 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால், மேலும் 20 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை என்றும் இவை அனைத்தையும் ஏகாலத்தில் (10 ஆண்டுகளில்) அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின் இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மைதானத்தில் கிடந்த 2 டன் மது பாட்டில்கள்; தூய்மை பணியில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.