திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள அனுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரசு அச்சக ஊழியர் குமரன். இவரது சகோதரர் பாஸ்கர். இவர்கள் இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சகோதர்கள் இருவரும் அலுவலகம் சென்றிருந்த நேரத்தில், அவர்களது மனைவிகளும் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர், வீடு திரும்பிய போது இருவரது வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டு பீரோ உடைந்திருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது, பீரோவிலிருந்து 10 சவரன் நகைகள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து சகோதரர்கள் இருவரும் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க மோப்ப நாய்களைக் கொண்டு தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
'திட்டம் போட்டு திருடற கூட்டம்' - ஜாலியான படம்தான்... குடும்பமா வாங்க!