நெல்லை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உள்ளாடையுடன் நிற்பது போன்று சித்தரித்த படத்தை ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தமிழ்நாட்டின் பீடை இந்த தேர்தலோடு அகற்றப்பட வேண்டும் என்று நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சார்ந்த முத்துக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த திமுகவினர் கொந்தளித்தனர்.
மேலும் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திசையன்விளை திமுக நகரச்செயலாளர் ஜான் கென்னடி நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜான் கென்னடி கொடுத்தப் புகாரின் பேரில் முத்துக்குமாரை நெல்லை சைபர் க்ரைம் போலீசார் இன்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தப் பதிவை தயார் செய்தது கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி ஐடி விங் நிர்வாகியான ஜெயக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, ஜெயக்குமாரையும் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே தகவல்
ஏற்கனவே தமிழக அரசு மீதும் முதலமைச்சர் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் பாஜகவினர் உள்பட பலரை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முதலமைச்சரை உள்ளாடையுடன் சித்தரித்து புகைப்படத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி உள்பட 2 பேரை நெல்லை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழக முதலமைச்சரை ஆபாசமாக திட்டிய வழக்கில் பல பேர் கைது செய்யப்படுள்ளனர்.
மேலும் கடந்த சில கடந்த மாதம் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு பரப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்ததன் பேரில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு: திமுக பிரமுகர்கள் போராட்டம்!