ETV Bharat / state

முதல் திருமணத்தை மறைத்து 2 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்: முதல் மனைவி புகார்

திருநெல்வேலியில் முதல் திருமணத்தை மறைத்து மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் மீது முதல் மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்: மனைவி கதறல்!

author img

By

Published : Dec 13, 2022, 7:49 PM IST

திருமணமானதை மறைத்து பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்

திருநெல்வேலி: பொன்னாக்குடி பகுதியில் வசிப்பவர், ஏஞ்சல் மரிய பாக்கியம். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது கணவன் தன்னுடன் நடந்த திருமணத்தை மறைத்து மேலும் இரு பெண்களுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அந்த மனுவில் கூறியதன்படி, 'ஏஞ்சல் மரிய பாக்கியத்திற்கும், குரும்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு அபிஷா, அஜிதா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவர் முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்து வரதட்சணை பணமும் கேட்டு துன்புறுத்திய நிலையில், அவர் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், முத்துக்குமாரின் குடும்பம் சமாதானம் சொல்லி அழைத்துச் சென்ற நிலையிலும் ஏஞ்சல் மரியபாக்கியத்தை மீண்டும் கொடுமைபடுத்தத் தொடங்கியுள்ளனர். துன்புறுத்தல் அதிகமானதும் தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார் ஏஞ்சல் மரிய பாக்கியம்.

குரும்பூர் காவல் நிலையத்தில் 104/15, CC-55515 வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏஞ்சல் மரிய பாக்கியம், தனது திருமணத்திற்குத் தாய் வீட்டில் அளித்த 12 சவரன் நகையை மகள்களின் கல்வித்தொகைக்கு உதவியாக கேட்டுள்ளார்.

அதனையும் கணவர் முத்துக்குமார் தர மறுத்ததால் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவிற்கும், தனது வாழ்வாதாரத்திற்கும் DVC 2/2017 என்ற வழக்கினை தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பு 30.11.2020ஆம் தேதியில் மாத செலவுத் தொகையாக ரூ.9000 மற்றும் ஒவ்வொரு மாதமும் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தரும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் படி மாத பராமரிப்புச் செலவு தொகையினை வழங்காதால் மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நாசரேத்தைச் சேர்ந்த மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்ற அருள் அன்புச்செல்வி என்பவரை முத்துக்குமார் திருமண செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும், முத்துக்குமாரின் பெற்றோர்கள் ஏற்பாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த டெல்சி ராணி என்பவரையும் திருமணம் செய்து கொண்டதாகவும் அறிந்த மரிய பாக்கியம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதில் அருள் அன்புச்செல்வி மற்றும் டெல்சி ராணி ஆகியோருடன் முத்துக்குமார் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.

எனவே, முத்துக்குமாருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முதல் திருமண பந்தத்தை மறைத்து முறையான விவாகரத்து ஏதும் பெறாமல் ஏமாற்றி, பல பெண்களை திருமணம் செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பான முறையில் வாழ்ந்து வரும் முத்துக்குமார் மற்றும் அருள் அன்புச்செல்வி, டெல்சி ராணி மற்றும் துணையாக இருந்த முத்துக்குமாரின் தந்தை தமிழரசன், தாயார் சாரதா மற்றும் முத்துக்குமாரின் தங்கை நித்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாதிப்புக்குள்ளான ஏஞ்சல் மரிய பாக்கியம் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களின் புகைப்படங்கள், திருமணத்திற்கான ஆவணங்களையும் இணைத்து அளித்துள்ளார்.

இதையும் படிங்க: லண்டனைப் போல் மாறப்போகும் சென்னை: எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.