ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரிக்கும் நீர்... - கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு

நெல்லை தாமிரபரணி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 18, 2022, 10:13 AM IST

Updated : Nov 18, 2022, 10:33 AM IST

வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அதேசமயம் மலைப்பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை.

இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 60 முதல் 65 சதவீதம் தான் நீர்மட்டம் உள்ளது. தற்போது பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது.

தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரிக்கும் நீர்..

இந்நிலையில் இன்று காலை திடீரென நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மஞ்சள் நிறத்தில் சேறு கலந்த தண்ணீர் சென்றது.

இதனால் வழக்கம்போல் ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள் வெள்ளம் வந்து விட்டதோ என்று வியப்புடன் பார்த்தனர். தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் இருந்து வடிந்து வரும் மழைநீரால் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ; ரயிலில் மதபிரச்சாரம்... இருவர் மீது வழக்குப்பதிவு

Last Updated : Nov 18, 2022, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.