தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலம் அருவியில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கு அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாகிவுள்ளதால் அங்கும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை நீடிப்பதால் நீர்வரத்து இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் குளிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.