தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கம் சார்பில் நடுநிலையான பெருந்தலைவர் ஆர்ப்பாட்டம் தென்காசியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் பால்ராஜ்,
- சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படி தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு கொள்கையை போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
- தரமற்ற அரிசியால் ஊழியர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் தரமான அரிசியை வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறுவதாக கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.