கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில், இந்து முன்னணி நகரச் செயலாளர் ஆனந்த் என்பவர் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர். இந்நிலையில் ஆனந்த் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மதரீதியான தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நெல்லை வண்ணாரப்பேட்டை, செல்லப்பாண்டியன் சிலை அருகே இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ’வேந்தர் பதவியைப் பயன்படுத்தி பாஜகவின் காவிமயக் கொள்கையைப் புகுத்தும் ஆளுநர்’ - ஸ்டாலின்