ETV Bharat / state

மழையால் இடிந்து விழும் கட்டடம்: உயிர் பயத்தில் தூய்மைப் பணியாளர்கள் - கட்டட பணியில் முறைகேடா? - தூய்மைப் பணியாளர்கள்

திருநெல்வேலி 1996ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட கட்டடம் மழையின் காரணமாக பெயர்ந்து விழுந்து தூய்மைப் பணியாளர் படுகாயமடைந்துள்ள நிலையில், கட்டடப் பணியில் முறைகேடு நடந்துள்ளதா? அரசு அலுவலரின் பிரத்யேக தகவல் குறித்த சிறப்புத் தொகுப்பு...

மழையால் இடிந்து விழும் கட்டடம்
மழையால் இடிந்து விழும் கட்டடம்
author img

By

Published : Nov 11, 2021, 10:31 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த மனக்காவலம் பிள்ளை நகர் அம்பேத்கர் காலனியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பில், 1996ஆம் ஆண்டு 365 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள பல்வேறு வீடுகளின் சுவர்கள் சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக சீலிங் எனப்படும் வீட்டின் மேற்கூரை சிமென்ட் பெயர்ந்து கீழே விழுவதால், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர்.

இடிந்து விழும் கட்டடம்

அதுவும் மழைக்காலங்களில் கூடுதலாக வீட்டில் சேதம் ஏற்படுவதால், இங்கு வாழும் பல்வேறு குடும்பத்தினர் தினம் தினம் மரண பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திருநெல்வேலியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அம்பேத்கர் காலனியிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. பல வீடுகளில் சிமென்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்துள்ளது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு, கழிவறையில் சுவர் இடிந்து விழுந்ததில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சுரேஷின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனால், வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார். சுரேஷுக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

குடியிருப்பில் முறைகேடு

அதிர்ஷ்டவசமாக தான் கழிவறைக்குச் சென்றபோது சுவர் இடிந்து விழுந்ததாகவும் ஒருவேளை தனது மகன் சென்றிருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும் என்றும் சுரேஷ் வேதனை தெரிவித்தார். அதேபோல், பல்வேறு வீடுகளில் சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் அபாய சூழ்நிலையில் காட்சியளிக்கிறது.

மேலும், இசக்கி முத்து என்பவரின் வீட்டில் நீர் ஒழுகுவதால் வீடு முழுவதும் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பாதுகாப்புக் கருதி, தனது ஆறு மாத கைக்குழந்தை, மனைவியை உறவினர் வீட்டிக்கு அனுப்பியுள்ளார். இந்தக் கட்டடம் கட்டி 25 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் ஆயுள் காலம் முடிவு பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பொதுவாக இதுபோன்று அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் ஆயுட்காலம் இருக்க வேண்டும். ஆனால், இந்த குடியிருப்புகள் 25 ஆண்டுகளில் காலாவதியாகி அபாயகரமாக காட்சியளிப்பதால், இதன் கட்டுமானத்தில் பெரும் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

408 கோடி ரூபாயில் புதிய கட்டடம்

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் சாந்தி கூறுகையில், 'மிகவும் ஆபத்தாகவுள்ள வீட்டில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி ஏற்கெனவே நாங்கள் நோட்டீஸ் வழங்கி விட்டோம். மாநகராட்சி சார்பில் மாற்று இடம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இங்கு வசிக்கும் பொதுமக்கள் கட்டடத்தின் மேல் பகுதியில் அதிகளவிலான நீர் தொட்டிகள் வைப்பதால் கட்டடம் விரைவில் சேதமாகியுள்ளது. கட்டடத்தின் உறுதித் தன்மையை தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகு விரைவில் சுமார் 408 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கே புதிய கட்டடம் கட்டப்படும்' எனத் தெரிவித்தார்.

வேதனையில் குடியிருப்புவாசிகள்

நோட்டீஸ் அனுப்பினாலும் தங்கள் அனைவருக்கும் உடனடியாக, இதே இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும், அதுவரை தாங்கள் வசிக்க மாற்று ஏற்பாடுகளை செய்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு வசிக்கும் அனைவரும் மிகவும் ஏழ்மையில் இருந்து வருவதால், அவர்களால் தங்களுக்குரிய மாற்று ஏற்பாடுகளை சுயமாக அமைத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அரசு உரிய மாற்று இடங்கள் அமைத்துக் கொடுப்பதுடன் போர்க்கால அடிப்படையில் கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்கின்றனர், அப்பகுதிவாசிகள்.

வேதனைத் தெரிவிக்கும் குடியிருப்புவாசிகள்

ஒப்பந்த அடிப்படையில் தினக் கூலிக்கு வேலை பார்க்கும் தங்களால் வெளியில் ஐந்தாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வாழும் அளவுக்கு வசதி இல்லை என்று இங்குள்ள மக்கள் புலம்புகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று வீடுகள் வழங்கி விட்டு, உடனடியாக கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் பிரதானக் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையும்... மீட்புப் பணிகளும்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.