ETV Bharat / state

Thulukkarpatti Excavation:ஈராயிரம் ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு.. புதையல்களை அள்ளித்தரும் துலுக்கர்பட்டி! - திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி

திருநெல்வேலி அடுத்த துலுக்கர்பட்டியில், தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வு பணியின் போது இன்னும் பல தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகளின் ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது குறித்து ஈடிவி பாரத்தின் ஒரு சிறப்புத்தொகுப்பினைக் காணலாம்.

துலுக்கர்பட்டி அகழாய்வு தளம்
துலுக்கர்பட்டி அகழாய்வு தளம்
author img

By

Published : Jul 5, 2023, 7:12 PM IST

துலுக்கர்பட்டி அகழாய்வு தளம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரி மற்றும் வள்ளியூர் இடையே நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தான், துலுக்கர் பட்டி. தமிழ்நாடு முழுவதும் இன்று உச்சரிக்கப்படும் இந்தப் பெயர் உலகம் முழுவதும் வாழும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டியதாக மாறி வருகிறது. இப்பகுதியில் தொல்பொருட்களின் சிதறலை பொதுமக்கள் தெரியப்படுத்தியதால், தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் அகழ்வாராய்ச்சி நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு இங்கு முதல்கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. மொத்தம் 36 ஏக்கரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் துலுக்கர்பட்டியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

முதல் கட்ட ஆய்வில் 17 குழிகளும், இரண்டாம் கட்டத்தில் தற்போது வரை 11 குழிகளும், தலா 5 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்டு தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தொல்லியல்துறை அதிகாரிகள் தலைமையில் துலுக்கர்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆராய்ச்சி மாணவர்கள் குழிகள் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துலுக்கர்பட்டி அகழ்வாராய்ச்சியில், தற்போது வரை 1,100க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ன. குறிப்பாக, துலுக்கர்பட்டியில் செம்பினாலான மோதிரம், இரும்பினால் ஆன பொருட்கள், சுடு மண்ணாலான விளையாட்டுப் பொருட்கள் (சில்லுகள் மற்றும் சதுரங்க காய்கள்), கார்னிலியன் மணிகள், நீலக்கல் மணி , கண்ணாடி மணிகள், பளிங்கு மணிகள் உள்பட 1,100 பொருட்கள் கிடைத்துள்ளன.

அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமீபத்தில் புலி என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட மண்பானை ஓடு எடுக்கப்பட்டது. கருப்பு, சிகப்பு வண்ணங்களில் இருந்த அந்த மண்பானை ஓட்டில் ''புலி'' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் திருநெல்வேலி நம்பியாற்றங்கரையில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பே, எழுத்தறிவு மிக்க சமூகமாக மக்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் துலுக்கர்பட்டியில், மீண்டும் பல்வேறு தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கு வி ர (ன்), தி ஈ ய போன்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு மிகுந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. எனவே, துலுக்கர்பட்டியில் தோண்ட தோண்ட புதையலை போன்று, பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன.

எனவே, விரைவில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி இங்கே நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இங்கு ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் அதிகாரியை ''ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின்'' சார்பில் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், ''துலுக்கர்பட்டியில் கிடைத்துள்ள பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கு வாழ்ந்த மக்கள் 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுவரை இரண்டு கட்டங்களாக 29 குழிகள் தோண்டியுள்ளோம். ஆரம்ப கட்டத்திலிருந்து குழியில் பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகிறது. குறிப்பாக மாடு போன்ற விலங்குகளின் எலும்புத் துண்டுகளும் கிடைத்துள்ளது. எனவே, இம்மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து அருகில் பிற இடங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்பட்டால் அரசின் அனுமதியோடு கூடுதலாக இங்கே அகழ்வாராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் பெண்கள் கூறுகையில், ''எங்கள் முன்னோர்கள் இங்கு 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருப்பது இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 'புலி' என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட மண்பானையினை எடுத்துள்ளோம். எங்களுக்கு பெருமையாக உள்ளது. உலக அளவில் எங்கள் ஊர் பேசப்படுகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் பொருநை (தாமிரபரணி ஆற்றங்கரை) நாகரிகம் (Thamirabarani Riverside Civilization) என்பது மிகத் தொன்மையானது. திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையோடு பேசி இருந்தார். குறிப்பாக, இந்திய துணைக்கண்டத்தில் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

தமிழ்நாட்டில் கீழடி(Kezhadi), கொற்கை (Korkai), ஆதிச்சநல்லூர்(Adichanallur) உட்பட எட்டு இடங்களில் தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கீழடி அகழ்வாராய்ச்சியில் அந்த காலத்து மக்கள் பயன்படுத்திய பொன் ஆபரணங்கள், முதுமக்கள் தாழி, விலங்குகளின் எலும்புத் துண்டுகள் உட்பட பல்வேறு முக்கியப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியிலும் முதுமக்கள் தாழி உள்பட பலவகையான தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த வகையில் துலுக்கர்பட்டியும் தமிழர் வரலாற்றை எடுத்துக்கூறுவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இதையும் படிங்க: சந்திரபாடி மீனவ கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட அரசுப்பேருந்து - ஸ்டியரிங் பிடித்து இயக்கிய எம்.எல்.ஏ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.