ETV Bharat / state

பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து அரிவாளால் வெட்டிய நபர் கைது - குற்றச் செய்திகள்

திருநெல்வேலி: முன்விரோதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தவரை தலையில் அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

murder case
murder case
author img

By

Published : May 26, 2020, 6:01 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தை அடுத்த குருந்துடையார்புரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் மாரிக்குட்டி (22). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி (34 ) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாரிக்குட்டியை செல்போனில் அழைத்துள்ளார் மாடசாமி. முன்விரோதத்தை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறி அழைத்ததால் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இருவரும் சென்று பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென மாடசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரிக்குட்டி தலையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளததில் மிதந்த மாரிக்குட்டியை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த மாரிக்குட்டி, சிகிச்சை பலனின்றி நேற்று (மே 25) உயிரிழந்தார்.

இதனிடையே தப்பியோடிய மாடசாமியை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.