ETV Bharat / state

மூதாட்டிக்காக காட்டுப்பகுதியில் 10 கி.மீ., நடந்து செல்லும் தபால்காரர் - கௌரவித்த அரசு

இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமத்தில் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள் என்பவருக்கு கிறிஸ்து ராஜா என்ற தபால்காரர் 10கிமீ காட்டுப்பகுதியில் நடந்து சென்று உதவித்தொகை கொடுத்து வருகிறார்

மூதாட்டிக்காக காட்டுப்பகுதியில் 10கிமீ நடந்து செல்லும் தபால்காரர்

author img

By

Published : Oct 13, 2022, 10:00 PM IST

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அடுத்த பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் நடுக்காட்டில் இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு சுமார் 24 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். அடர்வனப்பகுதி என்பதால் இந்த கிராமத்தில் தொலை தொடர்பு, பேருந்து வசதி உள்பட எவ்வித தொடர்பும் கிடையாது.

இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமானால் நேரடியாகவோ, தபால் மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள் என்பவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகையை வழங்குவதற்காக பாபநாசம் அப்பர் டேம் தபால் நிலையத்தில் பணியாற்றும், அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்து ராஜா என்ற தபால்காரர் காரையார் அணையை படகு மூலமாக கடந்து, அங்கிருந்த சுமார் 10 கிலோ மீட்டர் அடர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று மாதம்தோறும் உதவித்தொகையை வழங்கி வருகிறார்.

இவரது இந்த பணி தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது என்றே சொல்லலாம் நகருக்குள் தபால் கொண்டு சேர்க்கவே சலித்து கொள்ளும் ஊழியர்களுக்கு மத்தியில், ஒரே ஒரு பென்ஷனுக்காக எந்த வித தொலை தொடர்பும் இல்லாமல் யானைகள் சிறுத்தைகள் நடமாடும் நடுக்காட்டிற்கு மாதந்தோறும் நடந்து செல்லும் கிறிஸ்து ராஜாவின் பணி அக்கறை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மூதாட்டிக்காக காட்டுப்பகுதியில் 10கிமீ நடந்து செல்லும் தபால்காரர்

இந்த சேவைக்காக மாவட்ட நிர்வாகம் உள்பட சில அமைப்புகள் அவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த சேவையை பாராட்டி கிறிஸ்து ராஜாவை கௌவுரவிக்கும் விதமாக தபால் துறையில் கிராமிய சேவைக்கான உயரிய விருதான டக் சேவா விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் உள்ள தபால்துறை தலைமை அலுவலகத்தில் கிறிஸ்து ராஜாவை தபால்துறை உதவி சூப்பிரண்டு பாலாஜி சால்வை அணிவித்து பாராட்டினார்.

இதையும் படிங்க: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.