ETV Bharat / state

கஞ்சா வியாபாரிக்கு உடந்தையான நெல்லை காவலர் சிக்கியது எப்படி? - Nellai news

நெல்லையில் கஞ்சா வியாபாரிக்கு உதவியதாக நெல்லை காவலர் நவராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கஞ்சா வியாபாரிக்கு உடந்தையான நெல்லை காவலர் சிக்கியது எப்படி?

author img

By

Published : May 31, 2023, 8:06 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அதன்படி 2.0 உள்பட பல்வேறு பெயர்களில், அவரது உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வேட்டையை காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி மற்றும் டிஐஜிக்கள் என உயர் அதிகாரிகள் தலைமையில் தனிக் குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், போதைப் பொருட்கள் சப்ளை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நவராஜ் என்பவர், கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், காவலர் குறித்த பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.

அதாவது மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல சரக காவல் தலைவராக (ஐஜி) இருப்பவர் அஸ்ரா கார்க். இவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதில் பெயர் பெற்றவர். அந்த வகையில் டிஜிபியின் கஞ்சா தடுப்பு வேட்டை உத்தரவை மிகக் கவனமுடன் செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பெரிய அளவில் சப்ளை செய்து வரும் சதாம் உசேன் என்ற நபரை பிடிக்க அஸ்ரா கார்க், தனது கண்காணிப்பில் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார். இதன்படி, நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் சதாம் உசேன் நடமாடுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சதாம் உசேனை நெல்லை வந்து சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அப்போது உள்ளூர் காவலர் ஒருவரின் உதவி தேவை என்பதால், பாளையங்கோட்டை காவல் நிலைய காவலர் நவராஜ் உடன் இருந்துள்ளார்.

அப்போது காவலர் நவராஜ், கஞ்சாவை பறிமுதல் செய்து வருவதாக சதாம் உசேனை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், பிடிக்கச் சென்றபோது வேண்டுமென்றே அவரை தப்ப விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கேட்டபோது, சதாம் உசேன் தன்னை தாக்கிவிட்டு தப்பியதாக நவராஜ் கூறியுள்ளார்.

ஆனால் அவர் மீது சந்தேகம் ஏற்படவே, இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், கடந்த இரண்டு வாரங்களாக நவராஜின் நடவடிக்கைகளை காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதன் அடிப்படையில், நவராஜ் தனக்கு வேண்டிய சில அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு, கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

அதேபோல், தென் மாவட்டங்களில் முக்கிய இடங்களுக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்வதில் உதவிகரமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, நவராஜ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனுக்கு ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காவல் ஆணையர் ராஜேந்திரன், காவலர் நவராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து நவராஜிடம் துறை ரீதியான விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

இதனிடையே ஐஜி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வசம் இருந்த கஞ்சா குற்றவாளியை சாதாரண காவலர் ஒருவர் சர்வ சாதாரணமாக அழைத்துச் சென்று தப்ப விட்டு இருப்பதன் மூலம், சதாம் உசேனுக்கு பின்னால் மிகப் பெரிய கஞ்சா கடத்தல் கும்பல் செயல்பட்டு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனவே, காவலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.

மேலும், இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “காவலர் நவராஜ், கஞ்சா வியாபாரி ஒருவரை தப்ப விட்டுள்ளார். தனிப்படை காவலர்கள் அந்த கஞ்சா வியாபாரியை கைது செய்தபோது, காவலர் நவராஜ் கஞ்சாவை பறிமுதல் செய்து கொண்டு வருவதாக கஞ்சா வியாபாரியை அழைத்துச் சென்று தப்ப விட்டுள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புது ரூட்டில் மாமியாரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மருமகள்.. போலீசில் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.