ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் - உடந்தையாக இருந்த தாய்! - Police arrested for sexually harassing

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணகுடி காவலர்,உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் இருவர் மீதும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த காவலர்
பாலியல் தொல்லை கொடுத்த காவலர்
author img

By

Published : Sep 30, 2021, 7:54 PM IST

நெல்லை : வள்ளியூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட பணகுடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருள் ஜாக்சன். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கிருந்து தண்டனை மாறுதலாக கடந்த ஜனவரி மாதம் பணகுடி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஏற்கனவே மனைவியை பிரிந்து இருக்கும் இவர் கொடைக்கானலில் மற்றொருவர் மனைவி, குழந்தையை கூட்டிக்கொண்டு வந்து சட்டவிரோதமாக பணகுடியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை தாயின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சில் என்பவருக்கு புகார் வந்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று(செப்.29) வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சர்ச்சில் அளித்த புகாரின் அடிப்படையில் பணகுடி காவலர் அருள் ஜாக்சன், அவருக்கு உடந்தையாக இருந்த செல்வி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள காவலர் அருள், செல்வி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். காவலர் அருள் ஜாக்சன் கடந்த 26ஆம் தேதி முதல் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காவலர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டிய டிஜிபி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.