ETV Bharat / state

முழு கொள்ளளவுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் காரையார் அணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 1:12 PM IST

Updated : Jan 5, 2024, 2:17 PM IST

Papanasam Dam: நெல்லையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் காரையாறு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

Papanasam Dam water level increased in nellai
பசுமை சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் பாபநாசம் அணை

முழு கொள்ளளவுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் பாபநாசம் அணை

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பாபநாசம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த வனத்துக்கு நடுவே காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் பொதிகை மலையில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர் மேற்கண்ட அணைகளைத் தழுவி தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இந்த தாமிரபரணி ஆறு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, விவசாய தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், ஆரம்பத்தில் மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான், கடந்த டிசம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக அதிகனமழை கொட்டி தீர்த்தது. இந்த பெருமழையால் அதுவரை நிரம்பாமல் இருந்த காரையாறு, மணிமுத்தாறு ஆகிய பெரிய அணைகள் உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி மறுகால் வரை பாய்ந்தது.

மேலும் வரலாறு காணாத இந்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் கன அடி தண்ணீர் பாய்ந்தது. இதனால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்திற்கு பிறகும் தொடர்ந்து மலைப்பகுதியில் அவ்வப்போது மிதமான மழை நீடித்து வருகிறது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கனமழை பெய்ததால், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், கடந்த பல நாட்களாக 142 அடியில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும், தொடர்ந்து 113 அடியில் நீடிக்கிறது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு வரும் தண்ணீரும் உபரிநீராக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று இரவு மீண்டும் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தததால், காரையாறு அணை முழு கொள்ளளவுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அணையில் சுமார் 25 அடி வரை நீர்மட்டம் குறைந்த நிலையில், தற்போது அணை முழுவதும் தண்ணீர் ததும்பி பார்ப்பதற்கே மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. அணையை சுற்றிலும் பல்வேறு வகையான மரம், செடி, கொடிகள் பச்சை பசுமையாக வளர்ந்து நிற்பது அணைக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

பாபநாசம் பகுதியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் மலை பயணம் மேற்கொண்டால், காரையாறு அணையை அடைய முடியும். அப்படி அணைக்கு செல்லும் போது, சாலையைச் சுற்றிலும் காடுகள் நிறைந்த பகுதியாக மனதிற்கு அமைதி தருவது போல காட்சியளிக்கிறது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, சாலையின் இரு புறமும் மரங்கள் செடிகள் துளிர்விட்டு வண்ண மையத்தோடு நம்மை உள்ளே வரவேற்று செல்கிறது.

அதேசமயம் பாதுகாப்பு கருதி தற்போது காரையாறு செல்ல பொதுமக்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பாபநாசம் அணையை கண்டு ரசிக்க முடியாமல் அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 2 மணிநேரம் காத்திருப்பு.. கோபமாக வெளியேறிய எம்எல்ஏ.. திருவள்ளூர் கலெக்டர் ஆபிஸில் நடந்தது என்ன?

Last Updated : Jan 5, 2024, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.