ETV Bharat / state

குவாரி விபத்து - தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் கைது! - Quarry Accident

தலைமறைவாக இருந்த நெல்லை குவாரி உரிமையாளர்களை மங்களூருவில் வைத்து தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

நெல்லை குவாரி விபத்து- தலைமரைவாக இருந்த  உரிமையாளர்கள் கைது

author img

By

Published : May 20, 2022, 5:44 PM IST

திருநெல்வேலி: அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் திசையன்விளையைச்சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான சேம்பர் செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகியோருக்குச் சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், அப்பாவித்தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள லாரி டிரைவர் ராஜேந்திரனை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்தது. எனவே, குவாரி உரிமையாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், விபத்து நடைபெற்ற அன்றே உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமைதாரரான சங்கர நாராயணன் மற்றும் மேலாளர் ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த இருவரையும் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

மங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் செல்வராஜ் மற்றும் மகன் குமார் இருவரும் தங்கி இருந்தபோது, தனிப்படை காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரும் நெல்லை அழைத்துவரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நெல்லை குவாரி விபத்தில், உரிமையாளர்கள் கைது செய்யப்படாமல் இருந்தது பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதிரடியாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குவாரி விபத்து - பாறைகளை வெடி வைத்து தகர்க்கத் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.