ETV Bharat / state

'அரிக்கொம்பனை அதன் தாயுடன் சேர்க்க வேண்டும்' - நயினார் நாகேந்திரன் கோரிக்கை - நயினார் நாகேந்திரன் கோரிக்கை

கோதையாறில் உலாவரும் அரிக்கொம்பன் யானையை மீண்டும் அதன் தாய்நாடான கேரளாவில் அதன் தாயுடன் சேர்க்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 24, 2023, 10:40 PM IST

மக்களுக்கு நல்லது செய்யும் அரிக்கொம்பனை மீண்டும் கேரளாவில் கொண்டு சேர்க்க வேண்டும்

நெல்லை மாவட்டத்தின் பிரதான கால்வாய்களில் ஒன்றான கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாபநாசம் அணையிலிருந்து கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறித்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இன்று (ஜூலை 24) மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார், '2001-21 ஆம் ஆண்டு வரை கண்ணடியான் கால்வாயில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் கோடகன் கால்வாய்க்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், தற்போது காரையாறு அணையில் 70 அடி தண்ணீர் இருக்கும் போது கண்ணடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்றார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் ஒருபகுதிக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு மற்றொரு பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், இதனை நம்பி வாழை மற்றும் பயிர்கள் கோடகன் கால்வாய் பாசன பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகவே, அந்த பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என ஊர் மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். தங்களின் இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் கோரிக்கையால் வெளியானது அரிக்கொம்பனின் வீடியோ!

அரிக்கொம்பனை அதன் தாயுடன் சேர்க்க வேண்டும்: கேரளப் பகுதி மக்களிடத்தில் அரிக்கொம்பன் யானை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் தாய் யானை கேரளப் பகுதியில் உள்ளதாகவும் கூறினார். யானைகள் என்பது பொதுவாக நடந்தே சென்றால் தான் தெம்பாக இருக்கும் என்றும் அரிக்கொம்பன் யானையை நடக்கவிடாமல் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளது வேதனை அளிப்பதாக பேசினார். ஆகவெ, அரிகொம்பன் யானையை உடனடியாக அதன் தாயிடம் கொண்டு போய்விட வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், 'அரிக்கொம்பன் யானை வனப்பகுதிக்குள் வைத்திருக்கும் கஞ்சா செடிகளை பிடுங்கி நாசப்படுத்துவதுடன் வனப்பகுதில் வைத்திருக்கும் கள்ளச்சாராய உரல்களையும் அடித்து நொறுக்கிவிடும் என சொல்கிறார்கள். நல்லது செய்த யானையை தமிழ்நாட்டிற்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். நல்லது செய்த அரிக்கொம்பன் யானையை தமிழ்நாடு அரசு உடனடியாக அதன் தாயிடம் தாய்நாடான கேரளாவில் கொண்டு போய்விட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அரிக்கொம்பன் யானையின் ரசிகர்கள் கோரிக்கையை ஏற்று யானையின் வீடியோவை (Arikomban Elephant video) தமிழ்நாடு வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அரிக்கொம்பன் கன்னியாகுமரி மாவட்டம் அப்பர் கோதையாறில் உலாவி வருவதாக கூறினார்.

இதையும் படிங்க: முதன்முறையாக குற்றாலத்தில் நடைபெற்ற மகா ஆரத்தி பெருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.