ETV Bharat / state

நெல்லை அருகே சாலை விபத்து- உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Cameraman Shankar Death in Nellai Car Accident: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 4:40 PM IST

நெல்லை: சந்திராயன் -3 தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, விபத்தில் சிக்கி தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிரிழந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்ததோடு இன்று (ஆக.23) அவரின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், ஆரைக்குளத்தை சேர்ந்தவர் சங்கர்(33). இவர் தனியார் தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சந்திராயன் -3 தரையிறக்கம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதையொட்டி முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் செய்தி சேகரிப்பதற்காக ஒளிப்பதிவாளர்கள் சங்கர் (32), வள்ளி நாயகம், நாராயணன், செய்தியாளர் நாகராஜன் ஆகியோர் நேற்று மாலை காரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றனர். திருவனந்தபுரத்தில் செய்தி சேகரிப்பு முடிந்ததும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லை நோக்கி திரும்பி வந்தனர்.

நள்ளிரவு ஒருமணி அளவில் நெல்லை மாவட்டம், நாங்குநேரி நான்குவழி சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் (Cameraman) சங்கர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நாகராஜன் (45), மற்றொரு தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களான வள்ளிநாயகம் (38), நாராயணன் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தை அடுத்து, அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நாங்குநேரி போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து, நெல்லை செய்தியாளர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கிய சக செய்தியாளர்களுக்கு உதவி செய்தனர். செய்தி சேகரித்தப் பின், வீடு திரும்பும் வழியில் செய்தியாளர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கருக்கு மனைவி மற்றும் ஏழு வயதில் ஒரு மகன் உள்ளனர். மகனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் குடும்பத்தோடு சேர்ந்த தனது மகன் பிறந்தநாளை கொண்டாட சங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். இதற்கிடையில் தகவல் அறிந்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் வைகோ, நெல்லை முபாரக், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், '​நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில், மூன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று நெல்லை திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ​

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த சங்கர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.