ETV Bharat / state

ஆளுநர் தமிழிசை தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்: அமைச்சர் உதயநிதி காட்டம்! - சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு

Minister Udhayanidhi Stalin: தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை முதலில் பேரிடர் இல்லை என கூறிய மத்திய நிதி அமைச்சரே, தற்போது பாதிப்புகளை பார்வையிட வருவதால், தகுந்த நிதியை கொடுப்பார் என நம்புகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 12:48 PM IST

திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் மெதுமெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதை அடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.25) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

திருநெல்வேலியில் மழையால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 இலட்சம் ரூபாயும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களில் 11 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்துள்ளோம்.

இது தவிர கால்நடை மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு சர்வே எடுத்து முதல்கட்ட நிவாரண தொகை அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து நிவாரணமும் வழங்கப்படும்” என்றார். தென் தமிழகத்துக்கு தேவையான உதவியை செய்யவில்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், “அதை தான் செய்து வருகிறோம். கடந்த 10 நாளாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகிறோம்.அவர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “100 வருடத்துக்கு பிறகு பேய் மழை பெய்துள்ளது. கால்நடை இழந்தோர் சான்றிதழ் இருந்தாலே நிவாரணம் கொடுக்கப்படும். புதிய அணை கட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதில் சொல்வார்கள். மாஞ்சோலை மலைக்கிராமத்தில் சீரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் இது பேரிடர் இல்லை என்றார்.

இப்போது அவர் பாதிப்புகளை பார்க்க வருகிறார். கண்டிப்பாக அவர் பாதிப்பை பார்த்து விட்டு தகுந்த நிதி கொடுப்பார் என நம்புகிறோம். பிரதமர் நேற்று முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மழை வெள்ள பாதிப்பு குறித்து பேசி உள்ளார். எனவே போதிய நிதியை கொடுப்பார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 20 ஆண்டு உழைப்பு ஒரே நாளில் வீண்.. 50 லட்சம் மொத்தமாக போச்சு - கண்ணீர் சிந்தும் நெல்லை வியாபாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.