ETV Bharat / state

தம்பி இறந்த சோகத்தில் அடுத்த நொடியே உயிரிழந்த அண்ணன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தம்பி இறந்த சோகத்தில் அடுத்த நொடியே அண்ணனும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தம்பி இறந்த சோகத்தில் அடுத்த நொடியே அண்ணனும் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்

author img

By

Published : Oct 9, 2022, 10:38 PM IST

திருநெல்வேலி: மானூர் அய்யூப்கான் புரம் காலனியைச் சேர்ந்தவர் அய்யாதுரை - செல்லத்தாய் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அய்யாதுரை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மூத்த மகன் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் அவரது சகோதரர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (அக்.08) திடீரென அண்ணன் தம்பி இருவரும் அடுத்தடுத்து வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மானூர் காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது தந்தையை இழந்த நிலையில் அண்ணன் தம்பி இருவரையும் அவர்களது தாய் செல்லத்தாய் கவனித்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை அறிந்து மூத்த மகன் கூலி வேலை பார்த்து தனது தாய்க்கு உதவியாக இருந்துள்ளார். அதேசமயம் அவரது தம்பி சரிவரப் பள்ளிக்கு செல்லாமல் சில தீய செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

எனவே தம்பியிடம் அண்ணன் தனது தம்பிக்கு அறிவுரை கூறி தனது தாய்க்கு அவப்பெயர் ஏற்படாமல் நடந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அடிக்கடி அண்ணன் அறிவுரை வழங்குவதை தொந்தரவாக எண்ணி மனமுடைந்த தம்பி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கவனித்த அண்ணன் தன்னால் தான் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டதாக எண்ணி வேதனையடைந்து அடுத்த நொடியே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவன் இறந்த நிலையில், தனது இரண்டு மகன்களை நம்பி வாழ்ந்த செல்லத்தாய் தன் கண் முன்னே இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதை எண்ணி சோகத்தில் மூழ்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி பேச்சுக்கொடுத்து மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.