திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை வட்டாசியர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
இந்த அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்கள் வாங்க ஒப்பந்தங்களுக்கு அனுமதி பெறுவதற்கு தொடர்ந்து கையூட்டு கேட்பதாக புகார்கள் வந்தது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல்
கடத்துவதற்கு துணை வட்டாட்சியர் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சீவலப்பேரி ரவி என்பவர் துணை வட்டாட்சியரிடம் ஐந்தாயிரம் கையூட்டு பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையிலான காவல் துறையினர் துணை வட்டாட்சியர் விஜியிடம் விசாரணைநடத்தினர்.
நான்கு மணி நேர விசாரணைக்கு பின் துணை வட்டாட்சியரை கைதுசெய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறைச்சாலையில் அடைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.