நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து வரத்தொடங்கியது . இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, வனத்துறை தடைவிதித்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குடுபத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர் . இம்மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளது.