திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அடுத்த செங்குளம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து (50). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த பெண் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நல்லமுத்துவை கைது செய்தனர்.
இந்த வழக்கு திலுநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 26) தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது நல்லமுத்துவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.