ETV Bharat / state

அமமுக முக்கிய புள்ளி மீது பண மோசடி புகார்; தென்காசியில் பரபரப்பு!

திருநெல்வேலி: தென்காசியில் ஆயிரப்பேரியைச் சேர்ந்த சிவாஜி என்பவர் அமமுக மாவட்ட இணைச்செயலாளர் சிக்கந்தர் நியாஸ் மீது பணமோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

case
author img

By

Published : Sep 11, 2019, 9:28 PM IST

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரிடம் அமமுக மாவட்ட இணைச்செயலாளர் சிக்கந்தர் நியாஸ் என்பவர், பழைய தங்க நகைகளை புதிய தங்க நகையாக மாற்றி தருவதாகக் கூறி 38 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வைரம் மற்றும் கருப்பு வைரம் தொழில் செய்வதற்கும் சேர்த்து பணம் வாங்கியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், சிக்கந்தர் நியாஸ் தவறான தொழில் செய்வதாக சிவாஜியின் காதிற்கு எட்டியுள்ளது. இதனால், சிக்கந்தர் நியாஸிடம் கொடுத்த பணத்தை சிவாஜி திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சிக்கந்தர் பணத்தை தருவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவாஜி இதுகுறித்து குற்றாலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தான் வாங்கிய பணத்தை தவணை முறையில் தருவதாக சிவாஜியிடம் சிக்கந்தர் கூறியுள்ளார்.

ஆனால், சிக்கந்தர் கூறியபடி இரண்டு மாதங்கள் ஆகியும் கொடுத்த பணத்தை தரவில்லை, தவணை முறையிலும் செலுத்தவில்லை. பணத்தை பறிகொடுத்த சிவாஜி, இது குறித்து மீண்டும் குற்றாலம் ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், ஏமாற்றப்பட்ட பணத்தை விரைவில் காவல் துறையினர் கண்டுபிடித்து தர வேண்டும் இதுபோல் நிறைய பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் அனைத்திற்கும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சிவாஜி தெரிவித்துள்ளார்.

Intro:அமமுக முக்கிய புள்ளி மீது நூதன பண மோசடி புகார் !!! தென்காசியில் பரபரப்பு !!!

Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆயிரப்பேரி சேர்ந்த சிவாஜி என்பவர் அமமுக மாவட்ட இணைச்செயலாளர் சிக்கந்தர் நியாஸ் மீது பரபரப்பு பணமோசடி புகார் அளித்துள்ளார் ஆயிரம் பெரிய சேர்ந்த சிவாஜி என்பவரிடம் பழைய தங்க நகைகளை புதிய தங்க நகையாக மாற்றி தருவதாகவும் வைரம் மற்றும் கருப்பு வைரம் தொழில் செய்வதற்கு சிறுக சிறுக சுமார் 38 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது ஒரு கட்டத்தில் தன் மாற்றப்படுவதை அறிந்த சிவாஜி இது குறித்து சிக்கந்தர் நியாஸ் இடம் கேட்டபோது சரிவர பதில் வரவில்லை என தெரிகிறது மேலும் பல மாதங்களாக இழுத்தடிப்பது ஆகவும் தவறான தொழில் செய்வதாக சந்தேகப்பட்டு பணத்தை திருப்பி கேட்டதாகவும் தெரிவித்தார் இதுகுறித்து குற்றாலம் காவல்துறையில் புகார் செய்தபொழுது கடந்த 7ஆம் தேதி சிக்கன் தரண்யா நேரில் வரவழைக்கப்பட்டு 5 லட்சம் முதல் தவணையாக தருவதாகவும் பின்னர் இரண்டு மாதங்களில் அனைத்து பலத்தையும் தருவதாகவும் உறுதி அளித்து எழுதிக் கொடுத்ததாக தெரியவருகிறது ஆனால் குறிப்பிட்ட நாளில் ரூபாய் ஐந்து லட்சத்தை தரவில்லை என்றும் எந்த ஒரு அழைப்புகளையும் ஏற்கவில்லை என்றும் நேரில் சென்று விசாரித்த போது அவரைக் காணாமல் ஏமாற்ற பட்டதாகவும் ஆயிரப்பேரி சிவாஜி தெரிவித்தார் இது குறித்து நேற்று இரவு குற்றாலம் ஆய்வாளர் சுரேஷ்குமார் விடம் புகார் மனு அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர் ஏமாற்றப்பட்ட பணத்தை விரைவில் காவல் துறையினர் கண்டுபிடித்து தர வேண்டுமெனவும் இதுபோல் நிறைய பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் அனைத்திற்கும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ஆயிரபேரி சிவாஜி அவர்கள் தெரிவித்தார் காவல்துறை விசாரணையில் அனைத்து ஆதாரங்களையும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Conclusion:பேட்டி
சிவாஜி
ஆயிரபேரி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.