திருநெல்வேலி: தமிழ்நாட்டில் 6ஆவது டிஎன்பிஎல் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து டிஎன்பிஎல் நிர்வாக குழுவின் செய்தியாளர் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் செயலாளர் ராமசாமி கூறுகையில், "இந்த முறை டிஎன்பிஎல் போட்டிகள் நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. டிஎன்பிஎல் போட்டிகளுக்கு பிறகு தமிழ்நாடு அணி ஒயிட் பால் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதோடு தொடர்ந்து கோப்பைகளையும் வென்று வருகிறது" என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி, "டிஎன்பிஎல் போட்டியில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் என்பதால் கூடுதல் அழுத்தத்துடன் விளையாட வேண்டி இருக்கிறது. தொடர் வெற்றி பெற்றாலும் முதல் முறை விளையாடுவது போன்று அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி விளையாடுவோம்" என்றார்.
இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்! இன்று நடால் - ஸ்வெரேவ் மோதல்