ETV Bharat / state

"கர்நாடகா - தமிழக அணைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்! - today latest news

anbumani ramadoss opinion on Cauvery: காவிரி பிரச்சினையில் அரசியல் கூடாது, இதற்கு நிரந்தர தீர்வு காண கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள ஐந்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

anbumani ramadoss opinion on Cauvery
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அணைகளைக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 12:36 PM IST

Anbumani Ramdoss Press Meet

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தென் மாவட்டத்தில் அமைதி ஏற்படத் தொழில் வளம் பெருக வேண்டும். சென்னை, கோயம்புத்தூர் போன்று தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மணல், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் மத்திய அரசு நடத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு உள்ளது.

பீகாரில் இதனை நிரூபித்துக் கணக்கெடுப்பு எடுத்த தரவுகளையும் வெளியிட்டு விட்டார்கள். தமிழக அரசு இன்னும் ஏன் அறிவிப்பை வெளியிடவில்லை?. மாநில சுயாட்சி பற்றி பேசும் திமுக, தனக்கு அதிகாரம் இருந்தும் மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று கூறுவது ஏன்?. கருணாநிதி இருந்து இருந்தால் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்.

எனவே உடனடியாக தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். நீட் தேர்வு என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்தோ அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதாகப் பொய் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். திமுக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை.

இலங்கை அரசு கடல் கொள்ளையர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. அவர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கி கொள்ளை அடிக்கிறார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணத் தமிழக அரசு வேகமாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

வட இந்தியாவில் வக்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரு ஆணையம் உள்ளது. ஐந்து மாநிலங்களில் உள்ள அணைகளை இந்த ஆணையம் கட்டுப்படுத்துகிறது. அதேபோல் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகள், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை ஆகியவற்றைக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

காவேரி பிரச்சினை திமுக பிரச்சினை அல்ல. அது தமிழகத்தின் பிரச்சினை இந்த பிரச்சினையில் அரசியல் செய்யக் கூடாது" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை - கோவை 'வந்தே பாரத்' ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.