ETV Bharat / state

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து.. ஒருவர் பலி! - today Tirunelveli news

நெல்லை அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து

author img

By

Published : Mar 5, 2023, 8:21 AM IST

திருநெல்வேலி: மன்னார்புரம் அருகே உள்ள அணைக்கரை - பெட்டைகுளம் சாலையில் அணைக்கரை கிராமத்தில் திருமணம் மற்றும் கொடை விழாக்களில் பயன்படுத்தப்படும் வாண வேடிக்கை வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை இடச்சிவிளையை சார்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி கலா என்பவரின் பேரில் உரிமம் உள்ளது. மேலும் வருகிற மார்ச் மாதம் வரை இந்த தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள வெடிபொருள்களுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி பொருட்கள் அனைத்தும் வெடித்ததில் தொழிற்சாலையின் மேற்கூரை மற்றும் சுவர்கள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த ராஜ்குமார் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலையே பரிதாபமாக வெடி விபத்தில் பலியானார். மேலும் பாலா என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த திசையன்விளை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான ராஜ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமார் உடன்குடியை சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அரசிடம் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வருகிற மார்ச் மாதம் வரை இந்த தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு ஏதேனும் விதீமிறல் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளால் அதில் பலியாகும் பாமர மக்கள் பலியாகி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் இதே போல பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளிக்கு படுகாயம் ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் போது மூலப்பொருள் செலுத்தும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டதால் அறை தரைமட்டம் ஆன நிலையில் பெண் தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

அதே போல கடந்த ஜனவரி மாதம் சிவகாசி செங்கமல்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் ஒருவர் பலியானார். இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டாசு தீ விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது - பீகார் உயர்மட்ட குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.