திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சென்னை போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூர், புதுச்சேரி, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் நாள்தோறும் சுமார் 5,000 பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் காண்போரை முகம் சுழிக்கும் வகையில் பேண்ட் சர்ட் அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், பேருந்திற்குள் நின்று கொண்டு ஆபாச செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜன.05) மதுரை செல்லும் பேருந்தில் வைத்து பட்டப்பகலில் பயணிகள் முன்னிலையில் அந்த நபர் மீண்டும் ஆபாச செயலில் (சுய இன்பம்) ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகளில் சிலர், தூரத்தில் நின்று அந்த நபரின் அருவறுக்கத்தக்க செயலை வீடியோவாக பதிவு செய்து, காவல் துறை நடவடிக்கை எடுக்கும்படி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில், அந்த நபரின் அட்டகாசம் குறித்த வீடியோ வைரலான நிலையில், நெல்லை மாநகர காவல்துறைக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து மேலப்பாளையம் உதவி ஆணையர் சதீஷ்குமார் நடவடிக்கையின் பேரில், போலீசார் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக, நெல்லை புதிய பேருந்து நிலைய கடைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே பாப்பையாபுரம் வேதா கோயில் தெருவைச் சேர்ந்த யேசுபாலன் (45) என்பவர்தான் இந்த அருவறுக்கத்தக்கச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் இன்று (ஜன.06) யேசுபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் என காண்போரை முகம் சுழிக்கும் வகையில் ஆபாச செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்று மாலை நெல்லை - திருச்செந்தூர் வழியே ரயில் இயக்கப்படுமா? - பொறியாளர் குழு ஆய்வு!