ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 7000 கன அடி தண்ணீர் செல்கிறது.. கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

thamirabarani river flood: தொடர் மழையின் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 7000 கன அடி தண்ணீர் செல்வதால் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கரை பகுதிக்கோ, ஆற்றில் குளிக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 7000 கன அடி தண்ணீர் செல்வதால் நீர்வரத்து அதிகரிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 10:52 AM IST

திருநெல்வேலி: வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஓய்ந்திருந்த மழை நேற்று முன்தினம் முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மாலையும் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இன்றும் காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் அணைப்பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5400 கன அடி, காட்டாறாற்று வெள்ளம் 1500 கன அடி என மொத்தமாக தாமிரபரணி ஆற்றில் 7000 கன அடி தண்ணீர் செல்வதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தண்ணீர் இருகரைகளை தொட்டும் நெல்லை சந்திப்பு, குறுக்குத்துறை முருகன்கோவில் கல்மண்டபத்தை சுற்றியும் செல்கிறது. ஆற்றில் நீர்வரத்தின் காரணமாக பொதுமக்கள் ஆற்றை பார்வையிடவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 105 மில்லி மீட்டரும், ஊத்தில் 95 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 90 மில்லி மீட்டரும் காக்காட்சி பகுதியில் 82 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 73.60 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 62 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் அதிகாலை முதலே மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.