திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 27 நாள்களில் மட்டும் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த மானூரைச் சேர்ந்த பால்ராஜ் (எ) முருகாண்டியும் (65), நாங்குநேரி பானங்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சின்னபாண்டி (எ) சொக்கநாதனும் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பால்ராஜ் மீது திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொக்கநாதன் மீது மூன்றடைப்பு காவல் நிலையத்தில் 294(b) 323 506(ii) ஆகிய சட்டப் பிரிவின் கீழும், நாங்குநேரி காவல் நிலையத்தில் 395 என்ற சட்டப்பிரிவின் கீழும் வழக்குகள் நிலுவையிலுள்ளது.
அதே போல் சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாதேஷ் (20) என்பவரும், வீரவநல்லூர் ராஜகுத்தாலப்பேரியை சேர்ந்த ராஜவேல் (30) என்பவரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதில், மாதேஷ் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் 147, 302 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜவேல் மீது முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 375/19, 294(b) 353 307 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கீழ தேவநல்லூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கந்தையா (30) என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியும், நாங்குநேரி செல்வன் தெருவைச் சேர்ந்த கோகுல கண்ணன் (எ) மணி (எ) பெட்ரோல் மணி என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கந்தையா மீது களக்காடு காவல் நிலைத்தில் சட்டப்பிரிவு 247 148 294(b) 307 உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாங்குநேரி தேரடி தெருவைச் சேர்ந்த ஹைகோர்ட் ராஜா (33) என்பவரையும், சேரன்மகாதேவி மேல மூன்றாம் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(21) அரிகேசவநல்லூர் யாதவர் தெருவைச் சேர்ந்த துரை (22) சேரன்மகாதேவி ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த விஜய் சங்கர்(27) மற்றும் தங்கராஜ் (32) ஆகிய நான்கு நபர்களையும் கடந்த ஜூலை 25ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்கொண்ட 11 நபர்களையும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கறுப்பர் கூட்டம் வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை!