ETV Bharat / state

குடிநீர் தேவைக்காக வைகை அணை திறப்பு! - குடிநீர் தேவைக்காக வைகை அணை திறப்பு

தேனி: விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணை திறப்பு
வைகை அணை திறப்பு
author img

By

Published : Dec 10, 2019, 7:36 AM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. 71 அடி கொள்ளளவு கொண்ட இவ்வணை தற்போது பெய்து வரும் பருவமழையால் 68 அடி வரை உயர்ந்ததுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி 58 கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான 58ஆம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணை திறப்பு

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் வீதம் வைகை ஆற்றின் வழியாகத் திறக்கப்படும் தண்ணீர் கிருதுமால் நதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க... ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!

Intro: வைகை அணையில் இருந்து விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு.
Body: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. 71அடி கொள்ளளவு கொண்ட இவ்வணை தற்போது பெய்து வந்த பருவமழையால் 68அடி வரை உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி 58 கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான 58ஆம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 600கன அடி தண்ணீர் வீதம் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் கிருதுமால் நதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

Conclusion: இன்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.93 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5554மி.கன அடியாகவும், நீர் வரத்து 2353 கன அடியாகவும் இருக்கின்றது. அணையில் இருந்து 2800கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.