ETV Bharat / state

தேனி அருகே தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள் - விவசாயிகள் அச்சம்!

தேனி: கூடலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் இலவம் மரங்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள், பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மரங்களை சேதப்படுத்திய யானைகள்
மரங்களை சேதப்படுத்திய யானைகள்
author img

By

Published : Nov 28, 2019, 9:36 AM IST

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் வாழை, தென்னை, மா, இலவம் உள்ளிட்ட மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். விவசாய நிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன.

இந்த வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வந்ததால், விவசாயிகள் கொடுத்தப் புகாரின் பேரில் வனத்துறையினர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாயக்கர் தொழு, எள்கரடு, பளியன்குடி ஆகிய இடங்களில் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை அகழிகள் அமைத்தனர்.

தற்போது இந்த அகழிகள் சேதமடைந்து, மண்மேவி உள்ளது. மேலும், அகழி இல்லாத பகுதிகள் வழியாக யானை, காட்டுப்பன்றி, கரடி போன்ற வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், கூடலூர் வனச்சரகம், நாயக்கர் தொழு, சரளை மேட்டு புலம் பகுதியில் உள்ள பெருமாயி(49) என்பவருடைய இலவம் மர தோப்பிற்குள் இரவு நேரங்களில் புகுந்த யானைக்கூட்டம், இலவம் மரங்களை வேருடன் சாய்த்தும், மரங்களில் உள்ள பட்டைகளை உரித்து தின்றும் சேதப்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, விவசாயி பெருமாயி கூறுகையில், ' இந்த இலவம் மரத் தோப்பை நம்பியே எங்களது குடும்பம் உள்ளது. இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து தோட்டம் முழுவதையும் நாசம் செய்கிறது. சத்தம் போட்டு விரட்டினாலும், வெடி வெடித்து விரட்டினாலும் யானைகள் செல்ல மறுக்கிறது.

மரங்களைச் சேதப்படுத்திய யானைகள்

எனவே, வனத் துறையினர் சோலார் வேலி அமைத்தோ அல்லது அகழியை சரி செய்தோ யானைகள் தோட்டத்திற்குள் வராமல் தடுக்க வேண்டும். சுமார் 100 இலவ மரங்களுக்கும் மேல் சேதமடைந்துள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை சேதப்படுத்திய வீடுகளை சீரமைத்து தர பூர்வகுடிகள் கோரிக்கை!

Intro: கூடலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து இலவம் மரங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகள். விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்.
Body:         தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்களில்; வாழை, தென்னை, மா, இலவம் மரங்கள் உள்ளிட்டவைகளை விசாயிகள் சாகுடி செய்து வருகின்றனர். விவசாய நிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்ததால், விவசாயிகள் கொடுத்த புகாரின் போரில் வனத்துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாயக்கர் தொழு, எள்கரடு, பளியன்குடி ஆகிய இடங்களில் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை அகழிகள் அமைத்தனர்.
         தற்போது இந்த அகழிகள் சேதம் அடைந்து மண்மேவி உள்ளது. மேலும் அகழி இல்லாத பகுதிகள் வழியாக யானை, காட்டுப்பன்றி, கரடி போன்ற வன விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கூடலூர் வனச்சரகம் நாயக்கர் தொழு, சரளை மேட்டு புலம் பகுதியில் உள்ள பெருமாயி(49) என்பவருடைய இலவம் மர தோப்பிற்குள் இரவு நேரங்களில் புகுந்த யானைக்கூட்டம் இலவம் மரங்களை வேருடன் சாய்த்தும், மரங்களில் உள்ள பட்டைகளை உறித்து தின்றும் சேதப்படுத்தி விட்டு அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளர்.
         
Conclusion: இதுகூறித்து விவசாயி பெருமாயி கூறுகையில், இந்த இலவம் மரத் தோப்பை நம்பியே எங்களது குடும்பம் உள்ளது. இரவு நேரங்களில் யானை கூட்டமாக வந்து தோட்டம் முழுவதையும் நாசம் செய்கிறது. சத்தம் போட்டு விரட்டினாலும், வெடி வெடித்து விரட்டினாலும், யானை செல்ல மறுக்கிறது. எனவே வனத்துறை சோலார் வேலி அமைத்தோ அல்லது அகழியை சரி செய்தோ யானைகள் தேட்டத்திற்குள் வராமல் தடுக்க வேண்டும். சுமார் 100 இலவ மரங்களுக்கும் மேல் சேதப்படுத்தியுள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி - பெருமாயி, பாதிக்கப்பட்டவர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.