ETV Bharat / state

இடுக்கியில் கடையடைப்பு; தமிழ்நாடு-கேரள எல்லையில் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்

Idukki protest: கேரள மாநிலம் இடுக்கியில், நில விதிமுறைகளில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடையடைப்பு நடப்பதால் தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

author img

By

Published : Aug 18, 2023, 4:34 PM IST

Etv Bharat
Etv Bharat

இடுக்கி (கேரளம்): கேரளத்தில் 1964 மற்றும் 1993 நில விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும், பல்வேறு நிபந்தனைகளுடன் விதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தடையை திரும்பப் பெற வேண்டும், நில உரிமைப் பட்டா வழங்குவதை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.

இடுக்கி மாவட்டம் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்காக அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவர்களை காலி செய்யும்படி பிறப்பித்த உத்தரவிற்கு அப்பகுதியினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் கட்டுமானப் பணிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், 2019ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுமானப் பணி சார்ந்த நிபந்தனைகள், பூமி நிலங்கள் பதிவு சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தன் துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா

மேலும், பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரியும், நீண்ட காலமாக பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளில் வனத்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நில சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வைத்து இன்று அம்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முந்தல் அருகில் அமைந்துள்ள சோதனைச் சாவடியிலும், தமிழகத்தின் எல்லைப் பகுதியான போடிமெட்டு சோதனைச் சாவடியிலும், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்திலிருந்து மூணாறு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மதிப்பீட்டுக் குழுவினரிடம் அடுக்கடுக்காக புகார் அளித்த அரசுப் பள்ளி மாணவிகள்.. நெல்லையில் நடந்தது என்ன?

பால்வண்டி, காய்கறி, மருத்துவ தேவை போன்ற அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கேரளா சென்ற அரசுப் பேருந்து வாகனங்கள் பயணிகள் யாரும் இன்றி காலியாக திரும்பி வந்தன. இந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை இடுக்கி மாவட்டத்தில் கடையடைப்பு நடைபெறுவதால், மூணாறு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் போடிநாயக்கனூர் முந்தல் சோதனைச் சாவடியில் கேரள வாகன அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சிக்கித் தவிப்புள்ளாகி வருகின்றனர்.

இதையும் படிங்க: 1 லட்சத்திற்கும் அதிகமான ஆதார் தரவுகள் திருட்டு.. போலி கைரேகை மூலம் பல கோடி பணத்தை சுருட்டிய கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.