கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுபடுத்த பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக உழவர் சந்தை, பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணியில் உள்ளோர்களுக்கு அம்மா உணவகம், அங்கன்வாடி மையங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தேனியில் உள்ள அம்மா உணவகம், உழவர் சந்தை பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இட்லி, பொங்கல் ஆகியவற்றை வாங்கி அங்கேயே உணவருந்தினார். அவருடன் தேனி மக்களவை உறுப்பினரும் அவரது மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத்குமாரும் உணவருந்தினார்.
முன்னதாக தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு ரூ.150க்கு 18 வகையான காய்கறிகள் தொகுப்பு அடங்கிய பைகள் விற்பனையை பொதுமக்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க...தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்