ETV Bharat / state

பொதுமக்கள் வெளியே சென்றுவர மூன்று நாள்களுக்கு ஒருமுறை மூன்று மணி நேரம் - தேனி ஆட்சியர் - கோவிட்-19 தேனி மாவட்ட தற்போதைய செய்திகள்

தேனி: ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஆண்டிப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாள்களுக்கு ஒரு முறை, மூன்று மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் வெளியே சென்றுவர மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

பொதுமக்கள் வெளியே சென்றுவர நேரக்கட்டுப்பாடு விதித்த தேனி ஆட்சியர்

author img

By

Published : May 6, 2020, 11:59 AM IST

தேனி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் பொதுமக்கள் வெளியே வருவதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்துவருகிறது.

கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் பொதுமக்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு தடை உத்தரவை தளர்த்தி உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் கூட்டமாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருவதால் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.

இதனை சீர்செய்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை, கூட்டம் கூடுதல் போன்ற காரணங்களால் நோய்த்தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொதுமக்களின் நலன்கருதி மே 6ஆம் தேதி முதல் ஒரு நபர் மூன்று தினங்களுக்கு ஒரு முறை, குறிப்பாக மூன்று மணி நேரம் மட்டுமே வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கென அனுமதிபெற 9488056600 என்ற அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக வாகன எண், வெளியில் சென்றுவர காரணம் ஆகியவற்றை டைப்செய்து அனுப்பி அனுமதி பெறலாம்.

உதாரணமாக, நீங்கள் அத்தியாவசியப் பொருள் வாங்க வெளியில் செல்ல வேண்டுமெனில் 94880-56600 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பிட வேண்டும். பின்னர் குறுஞ்செய்தி வழியாக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின் குறிப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் சென்றுவர வேண்டும். இதற்கான விளக்கப்படம் https://youtu.be/woV0o-bEMaM என்ற Link மூலம் YouTube-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதியில்லாமல் வெளியில் வருபவர்கள் காவல்துறை, வருவாய்த்துறையினர் தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் மீது உரிய நடவடிக்கைககள் மேற்கொண்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒரு மூன்று தினங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க முன்கூட்டியே திட்டமிட்டு, நோய் பரவுதலின் தாக்கத்தை அறிந்து தற்காத்து கொள்ள அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வெளியில் சென்று வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.