இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற தகுதியிருந்தும் மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை பெற தகுதியுடைய விண்ணப்பதாரர் மற்றும் விண்ணப்பதாரரின் குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். ஆதார் எண்கள் மற்றும் கைபேசி எண்கள் கண்டிப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தனி சமையலறையுடன் கூடிய தனி முகவரியில் குடியிருக்க வேண்டும். மனுவில் குறிப்பிட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள், தமிழ்நாட்டில் (மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில்) வசிப்பவராக இருத்தல் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைத்து வேறொரு குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் அளிக்கும் போது கீழ்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். அனைத்து குடும்ப நபர்களுக்கும் ஆதார் அட்டை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் இல்லையெனில் பிறப்பு சான்று, குடும்பத் தலைவர் புகைப்படம், தமிழ்நாட்டில் தற்போதைய முகவரியில் வசிப்பதற்கான ஆதார் ஆவணங்கள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேற்காணும் உரிய ஆவணங்களுடன் கீழே இருக்கும் தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
- தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தேனி- 04546 - 25513302
- தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பெரியகுளம்- 04546 - 23121503
- வட்ட வழங்கல் அலுவலர், ஆண்டிபட்டி- 944500033204
- தலைமையிடத்து துணை வட்டாட்சியர், உத்தமபாளையம்- 04554 - 26522605
- தலைமையிடத்து துணை வட்டாட்சியர், போடிநாயக்கனூர்- 04546 - 280124
மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிப்பது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் வீட்டைவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ, இ-சேவை மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக மனுதாரரின் இருப்பிடத்திற்கு வந்து விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, மேற்காணும் அலுவலகங்களில் கணினி மூலம் பதிவு செய்து புதிய மின்னணு குடும்ப அட்டை விரைவில் வழங்க ஆவண செய்வார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவில்லாமல் அவதி: குரங்குகளின் பசியை போக்கிய காவலர்கள்!